×

மழை எச்சரிக்கையை முன்கூட்டியே கூறிவிட்டோம் என்ற தனது கருத்தை நிர்மலா சீதாராமன் வாபஸ் பெறவேண்டும் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

சென்னை : மழை எச்சரிக்கையை முன்கூட்டியே கூறிவிட்டோம் என ஒன்றிய நிதியமைச்சர் கூறிய திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?நிதியமைச்சர் அவர்களே!
மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள்.இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்.,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மழை எச்சரிக்கையை முன்கூட்டியே கூறிவிட்டோம் என்ற தனது கருத்தை நிர்மலா சீதாராமன் வாபஸ் பெறவேண்டும் : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Madurai M. B. Cu. Venkatesan ,Chennai ,Union ,Finance Minister ,
× RELATED மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு