×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு: இன்று கொரோனா தொற்று 752ஆக அதிகரித்த நிலையில் 4 பேர் உயிரிழப்பு..!!

டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது. சீனா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவும் பரவியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 565ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,997ல் இருந்து 3,420ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், புதியவகை ஜேஎன் 1 கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை பீகார் அரசு விதித்துள்ளது. மறுய்த்துவமனையில் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைக்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சனை இருப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளன.

The post இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு: இன்று கொரோனா தொற்று 752ஆக அதிகரித்த நிலையில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...