×

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!

நார அயடு என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன் உயிரினங்களைக் காப்பதற்கு நம் இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான் அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல் புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு.

ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம் எட்டு வாதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அனுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன்.

சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரனான் முரன் கிளர்ந்தெழுந்தான் அமரர் சிதறினர். இறைவனும் ஆற்றவிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான் முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான் அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று சுன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட மரனுக்கு முன்னின்றாள், முரன் முடிந்தான்.

கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்கி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகைவனை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அகரனைத் தானே கொன்றதாக கூறினாள் பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன் ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும்.

திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதரி தோன்றியது மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் ஆகையால் மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது.

மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதரி மோட்ச ஏகாதரி என்று வழங்கப் பெறும் இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரகத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதயை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல். பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.

The post வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்! appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Nara Ayyadu ,Narayana ,Naram ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...