×

நாகூர் கந்தூரி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது..!!

நாகை: நாகூர் கந்தூரி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாகூர் ஆண்டவர் தர்காவின் 467ம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ரகுபதி உள்ளிட்டோருக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினஸ்தர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகை மாவட்டம் நாகூர் தர்காவுக்கு வருகை தருவதாக தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக இந்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக ஆளுநர் நாகூர் கந்தூரி விழாவிற்கு வரக்கூடாது என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருச்சி வந்து அங்கிருந்து வாகனம் மூலம் நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அப்போது, கீழ்வேளூரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களை அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. சுமார் அரைமணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாகூர் கந்தூரி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor R. N. ,Ravi ,Nagai ,Tamil Nadu ,Governor R. N. Ravi ,NAGUR ,LORD TARGA ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து