×

சங்கராபுரம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள், அதன் அடிப்படையில் சங்கராபுரம் பகுதியில் நீர் பாசனத்தை தவிர்த்து மாணாவரி பயிர்களான உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து மூத்த விவசாயி பாண்டுரங்கன் கூறுகையில், மாணாவரி பயிர் என்பது கிணறு இல்லாமல் மழையை மட்டுமே நம்பி பயிரிடுவது தான் மாணாவரி பயிர் என்பதாகும், அதில் விளையக்கூடிய பயிர்கள் மிகக் குறைவாகும்.

உளுந்து, பருத்தி இதில் முக்கிய பயிராக உள்ளது பருத்தி. இது ஆறு மாத கால பெயராகும், ஆடி மாத முடிவில் மழை தொடக்கத்தில் இதனை பயிரிடுகிறோம், டிசம்பர் ஜனவரி மாதங்களில் அதனை அறுவடை செய்கிறோம், இதில் பராமரிப்பு செலவு சுத்தமாக குறைவு எந்த பராமரிப்பு செலவும் இல்லாமல் லாபத்தை எடுக்க கூடிய பயிராக பருத்தி உள்ளது. ஒரு குவிண்டால் பருத்தி ரூ 8000 முதல் 15 ஆயிரம் வரை விலை போகிறது.

இதனால் கிணறு பாசனம் இல்லாத மாணாவரி காடுகளில் பருத்தி பயிரிட்டு லாபம் அதிக பெற்று வருகிறோம் என்றார். இதனால் சங்கராபுரம் பகுதியில் உள்ள சோழம்பட்டு, நெடுமானூர், சேஷாசமுத்திரம், மஞ்சபுத்தூர், வட செட்டியந்தல், வடசேமபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post சங்கராபுரம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்