×

கண்ணமங்கலம் அருகே ₹33.60 லட்சம் மதிப்பில் கட்டிய அரசு பள்ளி கட்டிடம்

*எம்எல்ஏ திறந்து வைத்தார்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அருகே ரூ.33.60 லட்சம் மதிப்பில் கட்டிய அரசு பள்ளி கட்டிடத்தினை காட்டாற்று வெள்ளத்தினை கடந்து சென்று கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.படவேடு அடுத்த செண்பகத்தோப்பில் நேற்று முன்தினம் பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி 3கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். அங்கு ரூ.33.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக படவேடு ஊராட்சி பயன்பாட்டிற்காக டிராக்டர் மற்றும் டிப்பரை ஊராட்சி தலைவர் சீனிவாசனிடம் வழங்கினார்.பின்னர், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட படவேடு, அனந்தபுரம், குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், கல்பட்டு ஆகிய 7ஊராட்சிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரவிருக்கம் பாராளுமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். விழாவில் தாசில்தார் வெங்கடேசன், பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி, ரேஞ்சர் சத்திவேல், அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

The post கண்ணமங்கலம் அருகே ₹33.60 லட்சம் மதிப்பில் கட்டிய அரசு பள்ளி கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,MLA ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!