×

நாகப்பட்டினம் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த 80 மாடுகள் பிடிக்கப்பட்டது

*நகராட்சி நடவடிக்கை

நாகப்பட்டினம் : நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றிதிரிந்த 80 மாடுகள் இரவோடு இரவாக பிடிக்கப்பட்டது.
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் இன்று (23ம் தேதி) மாலை நாகப்பட்டினத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாளை (24ம் தேதி) நாகூர் சென்றடைகிறது.

இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள் என்பதால் நாகப்பட்டினம் நகர பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார். இதன்படி நகராட்சி ஆணையர் திருமால்செல்வம் அறிவுரையின்படி நகராட்சி ஊழியர்கள் நாகப்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் நாகூர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 80 மாடுகளை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக பிடித்தனர். இந்த மாடுகள் நாகூர் அருகே உள்ள பால்பண்ணை சேரி மற்றும் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்கம் பகுதியில் அடைக்கப்பட்டது.

The post நாகப்பட்டினம் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த 80 மாடுகள் பிடிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Nagar ,Nagapattinam ,Nagapatnam ,Nagor Andavar Ganduri festival ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...