×

மியான்மரில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு ₹280 கோடி போதைப்பொருள் கடத்தியதாக 67 பேர் கைது: தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

சென்னை, டிச.23: தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 10ம் ேததி இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி அந்த விடுதி அறையில் நடத்திய சோதனையில், இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்பேரில், பெரம்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளி அக்பர் அலி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூரில் உள்ள மோரே வழியாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டில் மியன்மரில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு ₹280 கோடி போதை பொருட்கள் கடத்தியதாக 67 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 65.061 கிலோ மெத்தம்பெட்டமைன், 3,338 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மரில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு ₹280 கோடி போதைப்பொருள் கடத்தியதாக 67 பேர் கைது: தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல் appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Sri Lanka ,Tamil Nadu ,National Narcotics Control Unit ,Chennai, ,Chennai ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...