×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை, டிச. 23: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியில் 142 எம்பிக்களை இடை நீக்கம் செய்ததை கண்டித்தும் நாடாளுமன்ற பாதுகாப்பற்ற நிலையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த பாஜகவை கண்டித்தும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, காங்கை குமார், ஒன்றிய கவுன்சிலர் திருமலை சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் அருணாசலம், மாநில செயலாளர் சாந்தகுமார், துணை தலைவர் தன்ராஜ், தேவேந்திரன், மாதவரம் தெற்கு பகுதி தலைவர்கள் சங்கர், வெங்கடேசன், அணில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார தலைவர் சிவசங்கர் செய்திருந்தார்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Union BJP government ,Uthukottai ,Thiruvallur South District Congress Party ,Tamaripakkam Complex ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...