×

தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மொரப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணல் கடத்தல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோதமாக மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது; தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உதார்விட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய நீதிபதிகள்; மொரப்பநாடு தாமிரபரணி ஆற்று மணலில் அரியவகை கனிமங்கள் இருப்பது அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிய வகை கனிமங்கள் உள்ள பகுதியை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து விதிகளின் படி கையாள வேண்டும். வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அரிய வகை கனிமங்கள் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்கப்பட்டதா?. ஒவ்வொரு குடிமகனின் உயிர், சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என கருத்து தெரிவித்த நீதிமன்றம் மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. …

The post தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Copperani ,CPCID ,iCordt Branch ,Madurai ,Thamiraparani ,Thuthukudi Morapanadu ,Copper River ,iCourt Branch Action ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...