×

மாணவி கூட்டு பலாத்காரம்; 5 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் அபினேஷ் (21). இவர், கடந்த 19ம் தேதி தனது காதலியான அரசு பள்ளியில் 12வது படித்து வரும் 17வயது மாணவியை, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, சிறிது நேரத்தில் காதலன் அபினேஷின் நண்பர்களான பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), ஸ்ரீதரன்(24), திருவாரூரை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 3 பேர் சென்றனர். பின்னர் காதலன் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அரவிந்தன், மற்ற 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்த போது தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.

பின்னர் இந்த வீடியோவை அவரது நண்பரான பூண்டியை சேர்ந்த ராகுல்(எ) குட்டி(24) என்பவரது செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ராகுல், மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் 1098க்கு வந்த தகவலின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்திபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் (எ) குட்டி ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவி கூட்டு பலாத்காரம்; 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Abinesh ,Babanasam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுவன் மீட்பு