×

வாக்காளர் பெயர் சேர்த்தல் விண்ணப்பங்கள் மீது கலெக்டர் கள ஆய்வு

விருதுநகர், டிச.23: வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தம் 2024ன் ஒரு பகுதியாக கடந்த அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அக்.27 முதல் டிச.9 வரை மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடம் புதிய வாக்காளர் பெயர் சேர்க்கைக்கு 26,020 விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்ய 2,425 விண்ணப்பங்கள், திருத்தம் மேற்கொள்ள 13,357 விண்ணப்பங்கள் என 41,802 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டமலை, வெங்கடாசலபுரம், சாத்தூர் நகராட்சி பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை கலெக்டர் ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வாக்காளர் பெயர் சேர்த்தல் விண்ணப்பங்கள் மீது கலெக்டர் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...