×

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

தாராபுரம், டிச.23: குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்பட்டி ஊராட்சியில் வீட்டு மனைகளுக்கு பட்டா இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி, முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணி துவக்க நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பெள்ளம்பட்டி, மருதூர் ஊராட்சியைச் சார்ந்த 85 பயனாளிகளுக்கு 32.94 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர்.

தொடர்ந்து பெள்ளம் பட்டி கிராமத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14.40 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்து 30லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, பெள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Tags : Gundadam Panchayat ,Union ,Tharapuram ,Gundam Panchayat Union ,Vellampatti Panchayat ,Dinakaran ,
× RELATED பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு