×

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்: கலெக்டர் தகவல்

திண்டுக்கல், டிச. 23: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்கு ஒட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் அணுகும் வருவாய்த் துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு, 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

அதன்படி, கடந்த 18 முதல் 26ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து டிச.27 முதல் டிச.29 வரை முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு: டிச.27ல் திண்டுக்கல் மாநகராட்சி மேட்டுப்பட்டி அவர்லேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழனி நகராட்சி பாரதி பள்ளி, ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உலகம்பட்டி புனித சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி, அய்யலுார் சந்தைப்பேட்டை எம்.பி.மஹால், பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம்கள் நடக்கவுள்ளன. டிச.28ல் பேகம்பூர் யானைதெப்பம் டி.பி.கே.என்.பள்ளி, தோட்டனுாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பழனி அங்காளஈஸ்வரி மஹால், ஒட்டன்சத்திரம் ஆர்.சி.லயோலா நடுநிலைப்பள்ளி, ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கவுள்ளன. டிச.29ல் திண்டுக்கல் நேருஜி மாநகராட்சி பள்ளி, பிள்ளையார் நத்தம் வி.பி.ஆர்.சி கட்டிடம், பழனி ஸ்டார் மஹால், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கவுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Dindigul ,Dindigul District ,Collector ,Poongodi ,District ,Municipal Corporation ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...