×

ஓ.எஸ். மணியன் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வேதரத்தினம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொகுதி முழுவதும் 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பரிசுப் பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளனர்.

அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளார் என்று வாதிட்டார். ஓ.எஸ்.மணியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதாரமற்ற புகார் கூறப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடந்திருந்தால் தேர்தல் ஆணையம் தடுத்திருக்கும். அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்காமல் இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தார். அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

The post ஓ.எஸ். மணியன் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : O.S. Manian ,iCourt ,Chennai ,AIADMK ,Vedaranyam ,O.S. Maniyan ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...