×

5வது டி20ல் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

டிரினிடாட்: இங்கிலாந்து அணியுடனான 5வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசியது. இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பில் சால்ட் அதிகபட்சமாக 38 ரன், லிவீங்ஸ்டன் 28, மொயீன் அலி 23 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோதி 3, ஆந்த்ரே ரஸ்ஸல், அகீல் உசைன், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து வென்றது. ஷாய் ஹோப் 43* ரன் (43 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர்போர்டு 30, சார்லஸ் 27 ரன் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி, அடில் ரஷீத் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. குடகேஷ் ஆட்ட நாயகன் விருதும், பில் சால்ட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். முன்னதாக நடந்த ஒருநாள் போட்டித் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என வென்றது குறிப்பிடத்தக்கது.

The post 5வது டி20ல் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : West Indies ,England ,Trinidad ,5th T20 ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...