×

கொரோனா சிகிச்சை மைய ஊழல் வழக்கில் சஞ்சய் ராவத் நண்பர் உட்பட 5 பேரின் 12 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்பு இருந்த போது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஜம்போ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. தகிசர் மற்றும் ஒர்லியில் ஜம்போ மையங்கள் அமைக்கும் ஒப்பந்தம் எல்.எச்.எம்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுஜித் பட்கர் உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்த நிறுவனம் குறைவான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுப்பி மோசடி செய்து மாநகராட்சியிடம் ₹32.44 கோடி வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை சுஜித் பட்கர் உட்பட மூவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எல்.எச்.எம்.எஸ். நிறுவனத்தின் பங்குதாரர்களான சுஜித் பட்கர், டாக்டர் ஹேமந்த் குப்தா, ராஜீவ் சாலுங்கே, சஞ்சீவ் ஷா மற்றும் அவர்களது நண்பரான சுனில் கதம் ஆகிய 5 பேரது சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ₹12.24 கோடியாகும்.

The post கொரோனா சிகிச்சை மைய ஊழல் வழக்கில் சஞ்சய் ராவத் நண்பர் உட்பட 5 பேரின் 12 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sanjay Rawat ,Corona ,MUMBAI ,Corona outbreak ,Takisar ,corona treatment center ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!