×

ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் தோல்வியை நம்பமுடியவில்லை: சச்சின் பைலட் பேட்டி


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை நம்பமுடியவில்லை என்று முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறினார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மறைமுக போட்டியாளருமான சச்சின் பைலட் கூறுகையில், ‘ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும். அதுதான் தற்போது நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடுமையாக மக்கள் பணி ஆற்றினோம். பிறகு ஏன் தோல்வி அடைந்தோம் என்பது தெரியவில்லை.

சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். டெல்லியில் இருந்து பல பாஜக தலைவர்கள் ராஜஸ்தானுக்கு வந்து நிறைய வாக்குறுதிகளை அளித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். பாஜக ஆட்சி அமைத்தாலும் கூட, இன்னும் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களுக்கான பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசிடம் கேள்வி கேட்போம்’ என்றார்.

The post ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் தோல்வியை நம்பமுடியவில்லை: சச்சின் பைலட் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan ,Sachin Pilot ,Jaipur ,Former Deputy ,Chief Minister ,Congress party ,Rajasthan.… ,Dinakaran ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை