×

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: சந்தனக் கட்டைகளை அரைக்கும் பணிகள் மும்முரம்

நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சந்தன கட்டைகளை பாரம்பரிய முறைப்படி அரைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 467வது கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை நாகூர் ஆண்டவர் சன்னதியில் வைத்து யாத்திரிகர்கள் ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து சிறு சிறு துண்டுகளாக்கி அரைத்து வருகின்றனர். அரைக்கப்பட்ட சந்தனம் குடங்களில் நிரப்பப்பட்டு நாகை முஸ்லீம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை பள்ளிவாசலில் இருந்து சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும். பின் தர்கா வாசலில் சந்தன குடங்கள் இரக்கப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

 

The post நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: சந்தனக் கட்டைகளை அரைக்கும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Nagor Dargah Ganduri festival ,Nagapattinam ,Tamil Nadu government ,Nagor Dhargah Ganduri festival ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...