×

புத்தாண்டு பரிசாக கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்தின் வரி பகிர்வாக ரூ.2,976 கோடி!!

டெல்லி : மாநிலங்களுக்கு வழங்கும் வழக்கமான வரி பகிர்வான ரூ.72,961 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக குறிப்பிட்ட தொகையை ஒன்றிய அரசு விடுவிப்பது வழக்கம். மொத்தம் 14 தவணைகளாக இந்த தொகை விடுவிக்கப்படும். இதில் டிசம்பர் மாதத்திற்கான பங்காக ரூ.72,961 கோடி ஏற்கனவே கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ரூ.72,961 கோடி தற்போது கூடுதலாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. புத்தாண்டு பிறப்பை ஒட்டியும், பொங்கல், மகா சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், கூடுதல் தவணையை முன்கூட்டியே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இந்த பண்டிகை காலங்களில் சமூக நல திட்டங்களை செயல்படுத்தவும் உட்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்துவதற்காக கூடுதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச அரசுக்கு ரூ.13,088.51 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு விடுவித்துள்ள தொகையை மாநில வாரியாக இங்கே பார்க்கலாம்.

1. ஆந்திரப் பிரதேசம் – ரூபாய் 2,952.74 கோடி
2. அருணாச்சல பிரதேசம் – 1281.93
3. அஸ்ஸாம் – 2282.24
4. பீகார் – 7338.44
5. சத்தீஸ்கர் -2485.79

6. கோவா – 281.63
7. குஜராத் – 2537.59
8. ஹரியானா- 797.47
9. ஹிமாச்சல் பிரதேசம் – 605.57
10. ஜார்கண்ட் – 2412.83

11. கர்நாடகா – 2660.88
12. கேரளா – 1404.50
13. மத்திய பிரதேசம்- 5727.44
14. மகாராஷ்டிரா- 4608.96
15. மணிப்பூர் – 522.41

16. மேகாலயா – 559.61
17. மிசோரம் – 364.80
18. நாகலாந்து – 415.15
19. ஒடிஷா – 3303.69
20. பஞ்சாப் – 1318.40

21. ராஜஸ்தான் – 4396.64
22. சிக்கிம் – 283.10
23. தமிழ்நாடு – 2976.10
24. தெலுங்கானா- 1533.64

25. திரிபுரா – 516.56
26. உத்தர பிரதேசம் – 13088.51
27. உத்தரகாண்ட் – 815.71.
28. மேற்கு வங்காளம் – 5488.88

The post புத்தாண்டு பரிசாக கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்தின் வரி பகிர்வாக ரூ.2,976 கோடி!! appeared first on Dinakaran.

Tags : Federal Government ,New Year ,Tamil Nadu ,Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு