×

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒட்டி சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒட்டி, நாளை மற்றும் 30-ம் தேதி தாம்பரம் -மங்களூரு(06129) இடையே சிறப்பு ரயில் என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும், அரையாண்டு விடுமுறை காரணமாக சென்னையில்இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் வெள்ளிக்கிழமை முதலே பயணிக்கத் தொடங்கி விடுவர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒட்டி, நாளை மற்றும் 30ம் தேதி தாம்பரம் -மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, சொரனூர் மற்றும் திரூரில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு தெரிவித்துள்ளது.

The post கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை ஒட்டி சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year ,Chennai ,Tambaram-Mangalore ,Dinakaran ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!