×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு: தனியார் மருத்துவமனையில் அனுமதி


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு: தனியார் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Adimuga ,minister ,C. V. Corona ,Sanmukh ,Chennai ,Former ,Minister of State ,C. ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை...