×

சேரன்மகாதேவியில் பெய்த தொடர் கனமழையால் 40 ஆயிரம் வாழைகள், 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

*விவசாயிகள் கவலை

வீரவநல்லூர் : சேரன்மகாதேவியில் மழை வெள்ளத்தில் சுமார் 40 ஆயிரம் வாழைகள் மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 16ம் தேதி இரவு முதல் டிச.18ம் தேதி வரை கனமழை பெய்தது. இதில் ஆற்றங்கரையோர பகுதிகளான கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் அதிக அளவு வாழைகள், நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுமார் 40 ஆயிரம் வாழைகள் மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் நெற்பயிர்கள் குறித்து வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டு சேத மதிப்பீடு பட்டியல் தயார் செய்து வருகின்றனர்.

மதிப்பீடு முடிந்த பின்னர் முழு சேதம் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, வங்க பாஸ் புத்தகம், பட்டா, அடங்கல், ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் பாதிக்கப்பட்ட வயல்களின் புகைப்படம் ஆகியவற்றை அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post சேரன்மகாதேவியில் பெய்த தொடர் கனமழையால் 40 ஆயிரம் வாழைகள், 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு