×

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்

டெல்லி: இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். டிசம்பர் 13ம் தேதியன்று நடந்த மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் அவையில் பதிலளிக்க வேண்டும் என முழக்கமிடும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதில், மொத்தமாக 146 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். மோடியும் , அமித் ஷாவும் இன்னும்கூட, மக்களவை பாதுகாப்பு மீறல் குறித்து அவையில் பதிலளிக்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக அவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களே இல்லாத சூழலில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது; இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தரவே எதிர்க்கட்சிகள் கோரின. அறிக்கை அளிக்க கேட்டதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 146 எம்.பி.க்களை பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்றிவிட்டு நாடாளுமன்றத்தை பாஜக அலுவலகமாக்கி பல சட்டங்களை நிறைவேற்றுகிறது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

The post எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Indian ,Congress ,Manikam Tagore ,Delhi ,Manickam Tagore ,
× RELATED இந்திய மக்கள் மாற்றத்தை...