×

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்

டெல்லி: இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தரவே எதிர்க்கட்சிகள் கோரின. அறிக்கை அளிக்க கேட்டதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 146 எம்.பி.க்களை பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்றிவிட்டு நாடாளுமன்றத்தை பாஜக அலுவலகமாக்கி பல சட்டங்களை நிறைவேற்றுகிறது அரசு என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

The post இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மரணப் படுக்கையில் உள்ளது: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Manikam Tagore ,Delhi ,Manickam Tagore ,
× RELATED ஆணையத்தை பாஜகவின் ‘பி’ டீமாக...