×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 67 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 67 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 2,882 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பொது மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் என சுகாதார கட்டம்மைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், வெள்ளம் சூழ தொடங்கிய உடனே மருத்துவமனைகளில் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் தடைபட்டது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 67 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Supramanian Tuticorin ,Thoothukudi ,Nella Tenkasi ,Kanyakumari ,Subramanian ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி