×

தேனி அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிகு ஓடை கண்மாய் நிரம்பியது

தேனி, டிச. 22: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சிகு ஓடைக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிகு ஓடைக் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து வரும் நீரினை ஆதாரமாக கொண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கண்மாய் நிரம்பாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் சிகு ஓடைக்கண்மாய் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. சிகு ஓடைக் கண்மாய் மறுகால் பாய்வதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் கண்மாயில் பூக்களை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இக்கண்மாய் நிரம்பியதையடுத்து, இதனைச் சுற்றியுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான அன்னஞ்சி, ரத்தினம்நகர், சுக்குவாடன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தேனி அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிகு ஓடை கண்மாய் நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Theni ,Chiku stream ,Chiku ,Oonjampatti Panchayat ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்