×

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

தேனி, டிச. 22: தூத்துக்குடி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் இம்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை தன்னார்வ அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பி வருகின்றனர். கலெக்டர் ஷஜீவனா ஆலோசனையின்பேரில், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் ஏற்பாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள எல்.எஸ்.மில்ஸ், ஏடிகே மில்ஸ், தேனி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேனி வருவாய்த் துறை ஒருங்கிணைந்து நிவாரணப் பொருள்களை திரட்டினர்.

இதன்படி, ரூ.20 லட்சம் மதிப்பிலான 4 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், 2.5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், ஆயிரம் நாப்கின்கள், ஆயிரம் தண்ணீர் வாளிகள், ஆயிரம் பாய்கள், 32 ஆயிரத்து 500 கேக்குகள், 20 ஆயிரம் ரஸ்க் உள்ளிட்ட உணவு பொருள்கள் அடங்கிய நிவாரண பொருள்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிவாரண பொருள்களை 2 லாரிகளில் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நேற்று மாலை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன், தேனி வருவாய் ஆய்வாளர் காதர் உசேன், சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் முரளி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் தனியார் மில்கள் மற்றும் ஓட்டல் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Nellai ,Theni ,Thoothukudi, Thoothukudi, Nellai district ,Thoothukudi, Nellai district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...