×

குற்றால அருவிகளில் 5வது நாளாக குளிக்க தடை

தென்காசி டிச.22: குற்றாலம் அருவிகளில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஆகியவற்றில் ஐந்தாவது நாளாக நேற்றும் தடை நீடித்தது. தென்காசி குற்றாலம் பகுதிகளில் கடந்த 17ம் தேதி துவங்கிய மழை இடையில் ஒன்றிரண்டு தினங்கள் ஓய்திருந்த நிலையில் நேற்று மதியம் முதல் மீண்டும் துவங்கியது. ஏற்கனவே மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் ஐந்தாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்தது. ஐந்தருவியில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் முதல் பெய்த மழையின் காரணமாக மீண்டும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை முதல் ஐந்தருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

The post குற்றால அருவிகளில் 5வது நாளாக குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kurdala ,Tenkasi ,Courtalam ,Aindaruvi ,Koortala ,Dinakaran ,
× RELATED தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில்...