×

நெற்பயிரில் மகசூலை பாதிக்கும் நோய் தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனை

 

காரைக்குடி, டிச.22: காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டார வேளாண்மை துறை சார்பில் கொத்தமங்கலம், கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணை மற்றும் நெல் விவசாய பகுதிகளை வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அவர் பேசுகையில், வயல்களில் பெரிய அளவில் மகசூலை பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களான குலைநோய், பாக்டீரியா இலை கருகல் நோய் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டு துளைப்பான் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

குலைநோயினை கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் ஏக்கருக்கு 120 கிராம் என்ற அளவிலும், பாக்டீரியா இலைக்கருகல் நோயினை காப்பர் ஆக்சி குளோரைடு, ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் கலந்து பயன்படுத்தலாம். பயிர்களை தாக்கும் பூச்சிகளான சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த தையோமீதாக்சம் ஏக்கருக்கு 50 கிராம் என்ற அ ளவில் பயன்படுத்தலாம். ஆனைக்கொம்பன் ஈ அறிகுறிகள் தென்பட்டால் பிப்ரோனில் ஏக்கருக்கு 250 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். வட்டார வேளா ண்மை அலுவலர் மங்கையர்கரசி, துணை வேளாண்மை அலுவலர் சரவணன், விதை அலுவலர் நாகேஷ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் கணேசன் உள்பட பலர் இருந்தனர்.

The post நெற்பயிரில் மகசூலை பாதிக்கும் நோய் தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Kothamangalam ,Kanadugathan ,Chakkottai District Agriculture Department ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...