×

3 வாரங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

 

திருப்பூர், டிச.22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண் 20ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இன்று மற்றும் 29ம் தேதி, அடுத்த மாதம் 5ம் தேதி ஆகிய நாட்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 3 வாரங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tirupur ,District ,Collector ,Kristaraj ,Tirupur District Administration ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு