×

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

தஞ்சாவூர், டிச.22: தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து தரிசனம் செய்து விட்டு பெரிய கோவிலை சுற்றிப்பார்த்து விட்டு சென்றனர்.

தற்போது ஐயப்பன் சுவாமி பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறுகோயில்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் மேல்மருவத்தூருக்கு செல்லும் பக்தர்களும் அதிக அளவில் பெரிய கோவில் வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேபோல் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் வாகனங்கள் அதிக அளவில் குவிந்தது.

The post தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Thanjavur ,Periyakoil ,Thanjavur Periyakoil ,Thanjavur… ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...