×

பஞ்சமாதேவி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

கரூர், டிச.22: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் மக்களை சந்தித்து துறை வாரியாக தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், பொது மக்களுக்கு நிறைவேற்றி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கரூர் ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி பஞ்சமாதேவி தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கருணாநிதி தலைமையில் “மக்களுடன் முதல்வர்’’ சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் கட்டண மாற்றங்கள், பெயர் மாற்றம் புதிய மின் இணைப்பு, இடமாற்றம் தொடர்பான மனுக்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நில அளவீடு வாரிசு சான்று, வருமான சான்று, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துணை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டுமான ஒப்புதல், குடிநீர் கட்டணம் திடக்கழி மேலாண்மை, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பராமரிப்பு உதவித்தொகை ,பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல், சுய தொழில் வங்கி கடன் உதவி தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல், தொழிலாளர் நலத்துறை சார்பில் உறுப்பினர் பதிவு பதிவு புதுப்பித்தல் உதவித்தொகை பெறுதல் ஒப்புதல், உள்பட பல்வேறு அரசு துறைகள் மூலமாக பொதுமக்கள் பெறவேண்டிய கோரிக்கை சம்பந்தமாகவும், நலஉதவிகள் மூலமாகவும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இமுகாமில் 540 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி, தாந்தோணி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, செல்வி, தாசில்தார் குமரேசன், மாவட்ட பொருளாளர் பாரத், விஏஓக்கள் கோமதி, சிந்து, ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்த தலைவர் சோமசுந்தரம் உள்பட கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை அனைத்து துறை துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

The post பஞ்சமாதேவி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Panchamadevi panchayat ,Karur ,Tamil Nadu ,M.K.Stal ,
× RELATED மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில்...