×

மீஞ்சூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தீர்மானம்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில், மிக்ஜாம் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை, விரைந்து சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் மாதந்திரக் மன்ற கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, துணை தலைவர்அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை முதன்மை அலுவலர் அன்பரசு வாசித்தார். இதில் கடந்த மாதத்தின் வரவு, செலவு கணக்குகள் செய்யப்பட்ட பொது நிதி பணிகள் மற்றும் திட்ட பணிகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் மிக்ஜாம், புயலில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து தேங்கிய மழை நீரை வெளியேற்றியது. தொடர் மழையின் போதும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றியது. மழைக்கு பிறகு சேர்ந்த மரம் மற்றும் குப்பைகளை அகற்றியது உள்ளிட்ட பணிகளுக்காக பேரூராட்சி ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பருவ மழை முன்னெச்செரிக்கையாக அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துவது எனவும், முடிவு செய்யப்பட்டது.

மேலும், வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் தேவையான சாலை வசதி, குடிநீர், கழிவு நீர் வசதி, எல்ஈடி மின்விளக்குள் அமைக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும், சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், மீஞ்சூர் பஜாரில் பொதுக்கழிப்பிடம் அமைக்கவும், இறைச்சி கடைகள் அகற்றிவிட்டு, மீன் இறைச்சி கூடம் அமைக்கவும் கோரிக்கைகள் வைத்தனர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நக்கீரன், துரைவேல் பாண்டியன், அபுபக்கர், ரஜினி, சுமதி தமிழ்உதயன், சுகன்யா வெங்கடேசன், ஜெயலட்சுமி தன்ராஜ், பாஸ்கர், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், ராஜன், கவிதா சங்கர், குமாரி புகழேந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Ponneri ,Migjam ,Ponneri… ,Meenjur Municipal Council ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பேரூராட்சியில் குளம்...