×

காந்திக்கு கதர், கிராமத் தொழில் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வி துறை ஒதுக்கீடு: முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல்

சென்னை: பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வி துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த உயர்கல்வி துறையை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

The post காந்திக்கு கதர், கிராமத் தொழில் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வி துறை ஒதுக்கீடு: முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Gandhiku ,Khadar ,minister ,Rajakannappan ,Chennai ,Ponmudi ,Higher Education ,
× RELATED பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே...