×

10 அரசு கல்லூரிகள் துவங்க அனுமதி

சென்னை:  அரசின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சரால் 13.8.21ம் தேதி 2021-22ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் போது 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சரால் 26.8.21ம் தேதி உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது ‘தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.  விருதுநகர் மாவட்டம்-திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்-திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம்-தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம்-ஒட்டன்சந்திரம், திருநெல்வேலி மாவட்டம்-மானூர், திருப்பூர் மாவட்டம்-தாராபுரம், தர்மபுரி மாவட்டம்-எரியூர், புதுக்கோட்டை மாவட்டம்-ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம்-சேர்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், திருவாரூர் மாவட்டம்-கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். மேற்படி அறிவிப்பிற்கிணங்க கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பிய கருத்துவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனடிப்படையில் 2022-23ம் கல்வியாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்க அனுமதியும், ஒவ்வொரு கல்லூரிலும் இளங்கலை -தமிழ், ஆங்கிலம், வணிகவியல்; இளமறிவியல்- கணிதம், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்குவதற்கு அனுமதியும், ஒவ்வொரு கல்லூாரிக்கும் 17 ஆசிரியர்கள் மற்றும் 17 ஆசிரியல்லாப் பணியிடங்கள் வீதம் 10 கல்லூரிகளுக்கு மொத்தம் 170 ஆசிரியர்கள் மற்றும் 170 ஆசிரியரல்லாப் பணியிடங்களை தோற்றுவித்தும், ஓராண்டுக்கான தொடர் செலவினமாக ரூ.21,23,40,600 மற்றும் தொடராச் செலவினமாக ரூ.3,60,00,000 ஆக மொத்தம் ரூ.24,83,40,600 நிர்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் பெருக்குபவர் ஆகிய பணியிடங்கள் வெளி முகமை மூலம் நிரப்பப்பட வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post 10 அரசு கல்லூரிகள் துவங்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary of Government ,Karthigayan ,Minister of Finance ,Human Resource Management ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு