×

25 நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்களில் 100 பயிற்றுநர்கள் பணிக்கு ஜன.5 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: கலை பண்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, மதுரை, கோவை, திருவையாறு அரசு இசை கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டிட மற்றும் சிற்ப கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசை பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு மையத்தில் 4 பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ரூ.7,000 மதிப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், திறமையும் 25 ஆண்டுகள் பணி அனுபவமும் கொண்ட நாட்டுப்புற கலைஞர்கள் அல்லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் ஜன.5க்குள் விண்ணப்பிக்க லாம்.விவரங்களை பண்பாட்டு துறை இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post 25 நாட்டுப்புற கலைப்பயிற்சி மையங்களில் 100 பயிற்றுநர்கள் பணிக்கு ஜன.5 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Art and ,Culture ,Department ,Madurai ,Coimbatore ,Thiruvaiyaru government ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...