×

முக்கூடல் அருகே 15 கிலோ கெண்டை மீன் வலையில் சிக்கியது: பொதுமக்கள் ஆச்சர்யம்


பாப்பாக்குடி: முக்கூடல் அருகே 15 கிலோ எடை கொண்ட கெண்டை மீன் வலையில் சிக்கியது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். தென்மாவட்டங்களில் கடந்த 17ம்தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் மறுகால் பாய தொடங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்னரே முக்கூடல் வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டில் மாறுகால் பாயத்தொடங்கியது. இந்த அணைக்கட்டுக்கு தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அணைக்கட்டு பகுதியில் முக்கூடல் அருகே சிங்கம்பாறை பகுதியை சேர்ந்த ஜாக்சன் துரை என்பவர் வலையை வீசி மீன் பிடித்துள்ளார், அப்போது ராட்சத மீன் ஒன்று வாலையில் சிக்கியுள்ளது. கடும் சவால்களுக்கிடையே போராடி வலையை இழுத்து மீனை வெளியே கொண்டு வந்தபோது ராட்சத கெண்டை மீன் சிக்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மீனை எடை பார்த்த போது சுமார் 15.600 கிலோ எடை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ராட்சத கெண்டை மீனை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

The post முக்கூடல் அருகே 15 கிலோ கெண்டை மீன் வலையில் சிக்கியது: பொதுமக்கள் ஆச்சர்யம் appeared first on Dinakaran.

Tags : Mukodal ,Papakudi ,Mukoodal ,Dinakaran ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...