×

சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதியதாக 8723 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதியதாக 8723 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (21.12.2023) நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசுகையில்; மறுகட்டுமான திட்டத்தின் கீழ் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் 192 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 216 புதிய குடியிருப்புகளுக்கும், ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் 480 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 702 புதிய குடியிருப்புகளுக்கும் , பருவாநகர் திட்டப்பகுதியில் 340 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 229 புதிய குடியிருப்புகளுக்கும், நாட்டான்தோட்டம் திட்டப்பகுதியில் 250 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 252 புதிய குடியிருப்புகளுக்கும்:

ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட டாக்டர் தாமஸ் ரோடு பகுதி – 1 மற்றும் பகுதி – 2 திட்டப்பகுதியில் 300 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 470 புதிய குடியிருப்புகளுக்கும் , சுபேதார் தோட்டம் திட்டப்பகுதியில் 256 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 300 புதிய குடியிருப்புகளுக்கும், கங்கைக்கரைபுரம் திட்டப்பகுதியில் 176 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 170 புதிய குடியிருப்புகளுக்கும், பத்ரிகரை திட்டப்பகுதியில் கீழ் 144 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 168 புதிய குடியிருப்புகளுக்கும், வடக்கு கிரியப்பா சாலை திட்டப்பகுதியில் 176 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 192 புதிய குடியிருப்புகளுக்கும், பெரியபாளையத்தம்மன் கோயில் திட்டப்பகுதியில் 32 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 32 புதிய குடியிருப்புகளுக்கும் அப்பாசாமி திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 64 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 68 புதிய குடியிருப்புகளுக்கும்:

எழும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பெரியார் நகர் திட்டப்பகுதியில் 440 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 448 புதிய குடியிருப்புகளுக்கும், எம்.எஸ்.நகர் திட்டப்பகுதியில் 224 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 240 புதிய குடியிருப்புகளுக்கும், வேம்புலியம்மன் கோயில் தெரு திட்டப்பகுதியில் 144 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 188 புதிய குடியிருப்புகளுக்கும் : சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் 302 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 324 புதிய குடியிருப்புகளுக்கும், சிந்தாதிரிப்பேட்டை, என்.என்.நகர் திட்டப்பகுதியில் 392 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 450 புதிய குடியிருப்புகளுக்கும், காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் 84 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 78 புதிய குடியிருப்புகளுக்கும் :

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 1476 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 1800 புதிய குடியிருப்புகளுக்கும், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம் திட்டப்பகுதியில் 290 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 522 புதிய குடியிருப்புகளுக்கும்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட இராஜாதோட்டம் திட்டப்பகுதியில் 84 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 162 புதிய குடியிருப்புகளுக்கும் , ஜமாலியா திட்டப்பகுதியில் 128 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 130 புதிய குடியிருப்புகளுக்கும் : வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காந்தி நகர் திட்டப்பகுதியில் 496 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 500 புதிய குடியிருப்புகளுக்கும் : திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட திருவொற்றியூர் திட்டப்பகுதியில் 336 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 336 புதிய குடியிருப்புகளுக்கும்:

இராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செட்டித் தோட்டம் திட்டப்பகுதியில் 240 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 242 புதிய குடியிருப்புகளுக்கும்: துறைமுகம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட B.R.N கார்டன் திட்டப்பகுதியில் 96 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 504 புதிய குடியிருப்புகளுக்கும், ஆக மொத்தம் 7142 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு 8723 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானம் நடைபெற்று வரும் திட்டப்பகுதிகளில் மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர வளர்ச்சி குழுமம், சுற்றுச்சூழல் போன்ற துறைகளிலிருந்து பெற வேண்டிய அனுமதியை பெறுவதற்காக பிரத்யேகமாக ஒரு தனி அலுவலர் அந்தந்த கோட்டங்களில் நியமித்து உடனுக்குடன் அந்தந்த துறைகளை அணுகி பெற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 நபர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சருக்கான (நிலை – III ) பணியிட ஆணையும் மற்றும் 1 நபருக்கு கருணை அடிப்படையில் பணவசூலாளர் பணிநியமன ஆணையும் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசுச் செயலர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், வாரிய இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் துர்காமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

The post சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் புதியதாக 8723 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!