×

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்: மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை: எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மிக் ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக உபரி நீர்வெள்ளத்தில் எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலம் படர்ந்தது. இதன்காரணமாக கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் படலம் மிதந்து படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவை சேதம் அடைந்தது. கடந்த 20 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வருமானம் இன்றி தவித்தனர். இந்தநிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிபிசிஎல் நிறுவனம் சார்பில், மீனவர்கள் மற்றும் தனியார் ஏஜென்சி ஊழியர்களை கொண்டு எண்ணெய் படலம் அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்த வழக்கில் மீன்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வீதம் 6,700 குடும்பங்களுக்கு வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வழங்க 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகுகளுக்கு தலா உ.10,000 நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது இவ்வாறு கூறியுள்ளது.

The post எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்: மீன்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Fisheries Department ,Chennai ,Mick ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!