×

கல்லூரி மாணவர் தற்கொலை: இறந்த நண்பரை நினைத்து முடிவு?


பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் கைலாசம் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் (எ) புருஷோத்தமன் (18). இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதல் வருடம் படித்து வந்தார். இவரது தந்தை லோகநாதன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் ராஜேஸ்வரியுடன் வசித்துவந்தார். வழக்கம்போல் நேற்று காலை கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை. மாலை 5 மணி அளவில் சஞ்சய்யின் பாட்டி வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சஞ்சய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீசார் சென்று சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சஞ்சய்யின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 2 நாட்களுக்கு முன் அனுசரிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் சஞ்சய் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே, நண்பரின் ஞாபகத்தால் தற்கொலை செய்தாரா, வேறு ஏதாவது காரணமா என்று விசாரிக்கின்றனர்.

The post கல்லூரி மாணவர் தற்கொலை: இறந்த நண்பரை நினைத்து முடிவு? appeared first on Dinakaran.

Tags : Perambur ,Sanjay (A) Purushothaman ,Indira Nagar Kailasam Street, Erukkanchery, Kodunkaiyur, Chennai ,Madhavaram ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்