×

நெல்லை மாவட்டத்தில் பெருவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் ஒன்றியக்குழு: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தனர்..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெருவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் ஒன்றிய குழுவினர் மக்களிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம், கயிலாசபுரம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் நீர் நிலைகளில் அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றம் மற்றும் ஆங்காங்கே குளங்கள் உடைந்து கிராமப்புறங்களையும் வெள்ளம் மூழ்கடித்ததால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இந்த மழை, பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் ஒன்றிய குழுவினர் இன்று நெல்லை வந்துள்ளனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பாதிப்பு வீடியோக்களை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து வெள்ளம் புகுந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், மழையில் நினைந்த கோப்புகள், தளவாட பொருட்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் கொக்கிரகுலம் தாமிரபரணி ஆறு மற்றும் அதன் நீர்வரத்து ஆகியவற்றை குழுவினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பகுதிக்கு சென்று மழையில் இடிந்த வீடு, கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடை ஆகியவற்றை பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். முன்னதாக நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்திற்கு சென்ற குழுவினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்கள் முறையாக வரவு வைத்து விநியோகிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

The post நெல்லை மாவட்டத்தில் பெருவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் ஒன்றியக்குழு: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Union Committee to Investigate Widespread Damage ,Nella District ,Paddy ,Union ,Paddy district ,Union Committee to Investigate the Widespread Damage in the ,Dinakaran ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...