×

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்


காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நேற்று மாலை சனி பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா நேற்று மாலை 5.20 மணிக்கு நடந்தது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனீஸ்வரர் இடம் பெயர்ந்தார். அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வசந்தகால் மண்டபத்தில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர், உற்சவர் சனீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டினர்.

நேற்று காலை திறக்கப்பட்ட கோயில் நடை இரவு சாத்தப்படாமல் இன்று காலை திறந்திருந்தது. இன்று காலை 7 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகை தந்து நலன் தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார் ஈடுபட்டனர்.

The post திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Shanipairchi festival ,Thirunallar ,Karaikal ,Shani Paerchi festival ,Tirunallaru Shani Bhagavan Temple ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...