×

ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு: ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் தகவல்


சென்னை: ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனித பயணம் ஆகும். துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள். இந்த நிலையில் ஹஜ் பயணம் மேற்கொள்ள டிசம்பர் 20ம் தேதி வரை(நேற்று) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கூறியதாவது: ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கை பல்வேறு இடங்களில் இருந்து அதிகமாக வருகிறது.

இதனால், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை நீட்டிக்கப்படுகிறது. வரும் ஜனவரி 15 தேதிக்கு 2024க்கு முன்பு பாஸ்போர்ட் பெறுபவர்களும், ஜனவரி 30க்குள் பாஸ்போர்ட் காலாவதி ஆகும் நிலை உள்ளவர்களும் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம். பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில் நேற்றுடன் கடைசி தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு: ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Haj Association ,President ,Abu Bakr ,CHENNAI ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்