×

டெல்லியில் சோகம்: மெட்ரோ ரயிலில் சிக்கி பெண் பலி; குடும்பத்துக்கு ரூ15 லட்சம் நிவாரணம்

புதுடெல்லி: டெல்லி இந்திரலோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த 14ம் தேதி இளம்பெண் ரீனா என்பவர், ரயிலில் ஏறி சில விநாடிகளில் இறங்கினார். அதற்குள் ரயில் பெட்டியின் கதவு மூடியது. இதில் அவரது சேலை சிக்கி நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். இதை பார்த்ததும் சக பயணிகள் மீட்டு அவரை, சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் கடந்த 16ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு 13 வயதில் மகள், 11 வயதில் மகனும் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால் காய்கறி வியாபாரம் செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார் ரீனா. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரகம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகத்தினர் நேற்று கூறுகையில், ‘டெல்லி மெட்ரோ ரயில்வே (நிவாரணம் பெறும் முறை) சட்டம், 2017ன்படி, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் கூடுதலாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நிவராணம் வழங்கப்படும். ரீனாவின் குழந்தைகள் மைனராக இருப்பதால், நிவாரண தொகையை சட்டப்படி அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன், ரீனாவின் 2 குழந்தைகளின் படிப்பு செலவையும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்று கொள்ளும்’ என்றனர்.

The post டெல்லியில் சோகம்: மெட்ரோ ரயிலில் சிக்கி பெண் பலி; குடும்பத்துக்கு ரூ15 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Reena ,Indralok metro station ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...