×

கொரோனா தொற்று அதிகரிப்பால் பீதியடைய வேண்டாம்: ஒன்றிய நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்


புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) மட்டும் 358 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டது. அதில், நேற்று மட்டும் ஒரே நாளில் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் 300 பேர், கர்நாடகா -13, தமிழ்நாடு- 12, குஜராத் -11, மகாராஷ்டிரா- 10, தெலுங்கானா – 5, கோவா -4, புதுச்சேரி- 2, உ.பி. -2, ஆந்திரா -1, அசாம் -1, ஹரியானா -1, டெல்லி- 1, காஷ்மீர் -1 ம.பி- 1 என அடங்குவர். தற்போது சிகிச்சை பெறுவோர் 2669 பேர். முன்னதாக டெல்லியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அவர் பேசும்போது, சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. இது புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராக தயாராக இருப்பதை அறிவுறுத்துகிறது. குறிப்பாக வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தயாராக இருக்க வேண்டும். கோவிட் தொற்று ஒழியவில்லை. அறிகுறிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

சாதாரணமானதல்ல சவுமியா சுவாமிநாதன்
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “கொரோனாவை சாதாரண சளியாக எடுத்து கொள்ள முடியாது. இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பல நீண்டகால பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநல பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே அதிகப்படியானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்க நாடு தயாராக இருக்கும் என நம்புகிறேன். கொரோனா பாதிப்பு திடீரென உயர்வது இது முதல்முறை இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் பல முறை இப்படி நடந்துள்ளது. இப்படி தான் நடக்கும் என முன்பே தெரியும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்தே வந்துள்ளது. இந்த ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஒமிக்ரானின் துணை வேரியண்ட். இது ஒமிக்ரானை போல லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

The post கொரோனா தொற்று அதிகரிப்பால் பீதியடைய வேண்டாம்: ஒன்றிய நிதி ஆயோக் உறுப்பினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Finance Commission ,New Delhi ,India ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...