×

திருவள்ளூர் பூங்காநகர் கோயிலில் சனிப் பெயர்ச்சி பரிகார மஹாயாகம் சிறப்பு பூஜை

திருவள்ளூர்: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 5 மணி 20 நிமிடத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. இதைமுன்னிட்டு, திருவள்ளூர் பூங்காநகர், காக்களூரில் உள்ள ஸ்ரீயோக ஞானதட்சிணாமூர்த்தி பீடம், ஸ்ரீ ஞான மங்கள சனீஸ்வர பகவான் சன்னதியில் சனிப் பெயர்ச்சி பரிகார மஹாயாகம் நடைபெற்றது. முன்னதாக மாலை 3 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீசூக்தஹோமம், காளிஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், ஸ்ரீஞான மங்கள சனீஸ்வரர் அஸ்த்ரஹோமம், மூலமந்திர ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து 4 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும் 4.15 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும் 5.20 மணிக்கு ஸ்ரீஞான மங்கள சனீஸ்வர் பெயர்ச்சியின் போது மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் கும்பம், மீனம், கடகம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். சனிப்பெயர்ச்சி பரிகார மஹாயாகத்தில் திருவள்ளூர், காக்களூர், பூங்காநகர், பெரியகுப்பம், மணவாளநகர் மற்றும் ஈக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி என்.வி.ஜெகன் வெங்கட்ராமனா சிவாச்சாரியார் உள்பட பலர் செய்திருந்தனர்.

The post திருவள்ளூர் பூங்காநகர் கோயிலில் சனிப் பெயர்ச்சி பரிகார மஹாயாகம் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Saturn ,Thiruvallur Parknagar Temple ,Thiruvallur ,Capricorn ,Aquarius ,Tiruvallur Parknagar Temple ,
× RELATED இந்த வார விசேஷங்கள்