×

“உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விரைவில் பொன்முடிக்கு விடுதலை பெற்றுத் தருவோம்”: மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: திமுக சட்டத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விரைவில் பொன்முடிக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று பொன்முடி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு மற்றும் தண்டனை தொடர்பாக தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு இது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம். பொன்முடி மனைவி ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் ஈட்டும் மோட்டார் வாகன விற்பனை உள்ளிட்ட பல வியாபாரத்தில் ஈடுபடுகிறார். பொன்முடி மனைவிக்கு குடும்ப சொத்தாக மட்டும் 100 ஏக்கர் சித்தூரில் இருந்தது. பொன்முடியின் மனைவிக்கு அவரது சகோதரரும் ஏராளமான பயணத்தை கொடுத்துள்ளார் என்று என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4லட்சமே இருந்ததாக புகார்:

வழக்கு தொடரப்பட்டபோது பொன்முடியிடம் வருமானத்துக்கு அதிகமாக வெறும் ரூ.4.8 லட்சம் மட்டுமே இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் சந்தேகம் என்று கூறி ஐகோர்ட் நீதிபதி தண்டனை விதித்துள்ளார். எங்களை பொறுத்தவரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாதவர் என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தீர்ப்பை நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம்:

திமுக சட்டத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விரைவில் பொன்முடிக்கு விடுதலை பெற்றுத் தருவோம். அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக ஜெயச்சந்திரன் இருந்ததால் சட்டப்படி இந்த வழக்கை விசாரித்து இருக்கக்கூடாது. இதனை நேற்று நீதிபதியிடம் சுட்டிக்காட்டியபோது முன்பே கூறியிருந்தாலும் நான் விலகியிருக்க மாட்டேன் என்றார். வருமானத்துக்கு அதிகமாக பொன்முடி சொத்து குவித்ததற்கான ஆதாரம் திரட்டமுடியவில்லை என விசாரணை அதிகாரியே தெரிவித்திருக்கிறார்.

பொன்முடி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் அளித்த வழக்கின் தீர்ப்பையே நிறுத்திவைக்க வேண்டும் என வலியுறுத்துவோம். பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தது இறுதித் தீர்ப்பல்ல. பொன்முடி வழக்கில் ஆவணங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

The post “உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விரைவில் பொன்முடிக்கு விடுதலை பெற்றுத் தருவோம்”: மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Goldilocks ,Attorney ,N. R. ,Chennai ,Bonmudi ,Dimuka Law Department ,Pondok ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...