×

நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் இருந்து 95 பேரும், மாநிலங்களவையிலிருந்து 46 பேரும் என 141 எம்பி-க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த எம்பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி-க்கள் நாடாளுமன்ற அறை, உள்நுழைவுப் பகுதி, கூடம் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என மக்களவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்கின்றனர். ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யபட்ட எம்.பி.க்கள் டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி appeared first on Dinakaran.

Tags : Parliament ,M. ,Delhi ,Vijay ,Chawuk ,New Delhi ,Vijay Chawuk ,Vijay Chauk ,Dinakaran ,
× RELATED வரன்முறை செய்யாத மனைகளுக்கு குடிநீர் இணைப்பு மாநகராட்சி மேயர் அறிவிப்பு