×

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு காரணமாக இன்றும் 12 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வெ அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 4 மாவட்டங்களில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது.

இதனை அடுத்து ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு காரணமாக இன்றும் 12 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : SOUTHERN ,SOUTHERN RAILWAY ,Nella: Southern Railway ,Nellai ,Thiruchendur ,
× RELATED தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்...